இந்தியாவில் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவியுள்ளது - உலக சுகாதார அமைப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

இந்தியாவில் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவியுள்ளது - உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் தற்போது வைரஸ் வேகமாக பரவுவதற்கு உருமாறிய கொரோனா ஒரு பங்காக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய வகை வைரஸ் பரவியது கண்டறியப்பட்டது. இதற்கு பி-1-617 என்று பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் கொரோனா வேகமாக பரவுவதற்கு இந்த உருமாற்ற கொரோனாதான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு இடையே இந்தியாவில் உருமாறிய கொரோனா மற்ற நாடுகளுக்கு பரவியது.

இதனால் பல்வேறு நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் 17 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு கூறியதாவது இந்தியாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பி-1-617 உருமாறிய கொரோனா வைரஸ் குறைந்தது 17 நாடுகளுக்கு பரவி உள்ளது. தரவு தளத்தில் 120 க்கு மேற்பட்ட வைரஸ் வரிசைகளை ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளது.

பெரும்பாலான வைரஸ் வகைகள் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து பதிவேற்றப்பட்டன.

பி-1-617 உருமாறிய வைரஸ் பிறழ்வு மற்றும் குணாதியசங்களை கலவை மாறுபாடு என்று அறிவிப்பதை நிறுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் பிற மாறுபாடுகளை காட்டிலும் பி-1-617 அதிக வளர்ச்சி விகிதத்தை கொண்டுள்ளது. இது வேகமாக பரவக்கூடிய தன்மை கொண்டது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் தற்போது வைரஸ் வேகமாக பரவுவதற்கு உருமாறிய கொரோனா ஒரு பங்காக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad