சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இன்று முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி, 8 ஆம் திகதி வரை செலுத்தப்படும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 28, 2021

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இன்று முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி, 8 ஆம் திகதி வரை செலுத்தப்படும்

(செ.தேன்மொழி)

கொவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் அஸ்ட்ரா ஜெனேக்கா முதலாவது தடுப்பூசி ஏற்றிக் கொண்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கான அஸ்ட்ரா ஜெனேக்கா இரண்டாவது தடுப்பூசி இன்று முதல் கட்டம்கட்டமாக ஏற்றப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர், ஆணையாளர் (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, சிறைச்சாலைகளில் கொவிட்-19 வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதனால், சிறைச்சாலைகளில் பணிபுரிந்து வரும் அதிகாரிகளுக்காக அஸ்ட்ரா ஜெனேக்கா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டிருந்தன. 

அதற்கமைய முதலாம் கட்ட தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்ட 5,153 அதிகாரிகளுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் இன்று முதல் எதிர்வரும் மாதம் 8 ஆம் திகதி வரை செலுத்தப்படவுள்ளன.

இதன்போது கொழும்பில் அமைந்துள்ள சிறைச்சாலைகள் தலைமையகம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, மகசின் சிறைச்சாலை உட்பட களுத்துறை, குருவிட்ட, நீர்கொழும்பு, பல்லன்சேன, வட்டரெக்க மற்றும் அம்பேபுஸ்ஸ ஆகிய சிறைச்சாலைகளின் அதிகாரிகளுக்கு இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி சனிக்கிழமை வரை இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் மாதம் 3, 4 ஆம் திகதிகளில் போகம்பர சிறைச்சாலை, தும்பர சிறைச்சாலை மற்றும் பல்லேகெல திறந்தவெளி சிறைச்சாலைகளில் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படுவதுடன், அங்குணுகொலபெலஸ்ஸ, காலி, மாத்தறை மற்றும் வீரவில ஆகிய சிறைச்சாலைகளின் அதிகாரிகளுக்கு எதிர்வரும் மாதம் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் இரண்டாம் கட்ட அஸ்ட்ரா ஜெனேக்கா தடுப்பூசிகள் ஏற்றப்படும் என்றார்.

No comments:

Post a Comment