நீர்த் தேக்கங்களை நிர்மாணிப்பதால் சிங்கராஜ வனத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடும் : UNESCO - News View

About Us

About Us

Breaking

Thursday, March 25, 2021

நீர்த் தேக்கங்களை நிர்மாணிப்பதால் சிங்கராஜ வனத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடும் : UNESCO

உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்திற்குள் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நீர்த் தேக்கங்களால் வனத்தின் 4 ஹெக்டேயர் நிலப்பரப்பிற்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என UNESCO வின் இலங்கை காரியாலயம் தெரிவித்துள்ளது.

இது குறித்து விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சமல் ராஜபக்ஸவுடன் கலந்துரையாடியதாகவும் UNESCO வின் இலங்கை காரியாலயத்தின் செயலாளர் பேராசிரியர் புஞ்சி நிலமே மீகஸ்வத்த தெரிவித்தார்.

நீர்த் தேக்கங்கள் நிர்மாணிக்கப்படுவதால், சிங்கராஜ வன சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தினையும் அமைச்சருக்கு சுட்டிக்காட்டியதாக அவர் குறிப்பிட்டார்.

கிங் கங்கையை மறித்து லங்காகம மாதுகெட்ட பிரதேசத்தில் நீர்த் தேக்கங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை வழங்குவது தொடர்பில் பாரிஸில் அமைந்துள்ள உலக மரபுரிமை குழுவிற்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளதாக பேராசிரியர் புஞ்சி நிலமே மீகஸ்வத்த தெரிவித்தார்.

No comments:

Post a Comment