பிரசாந்தனின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, March 1, 2021

பிரசாந்தனின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பூ. பிரசாந்தன் மீதான வழக்கு கொரோனா தொற்று அபாயம் காரணமாக இன்றையதினம் (01) இணைய வழி ஊடாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் ஏ.சி. ரிஷ்வான் உத்தரவிட்டுள்ளார்.

ஆரையம்பதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த பிரசாந்தன் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment