குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுகத் ரோஹன உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள குற்றச்சாட்டு மறுப்பு மனுவை எதிர்வரும் 17 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (01) தீர்மானித்துள்ளது.
நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த குற்றச்சாட்டு மறுப்பு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக பொய்யான சாட்சிகளை உருவாக்கியதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள தமக்கு பிணை வழங்குமாறு கோரி, கம்பஹா மேல் நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையை சவாலுக்குட்படுத்தி இந்த குற்றச்சாட்டு மறுப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தாம் சார்பில் தமது சட்டத்தரணிகள் முன்வைத்த பிணைக் கோரிக்கையை நிராகரித்து கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் கடந்த டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திருத்தி தம்மை பிணையில் விடுவிக்குமாறு மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment