இலங்கை அணி இந்த வருடத்தில் கலந்து கொள்ளும் கிரிக்கெட் போட்டிகள் - News View

About Us

About Us

Breaking

Monday, March 1, 2021

இலங்கை அணி இந்த வருடத்தில் கலந்து கொள்ளும் கிரிக்கெட் போட்டிகள்

இந்த வருடத்தில் இலங்கை கிரிக்கெட் அணி 8 டெஸ்ட் போட்டிகளிலும், 15 ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலும், 12 T20 போட்டிகளிலும் கலந்து கொள்கின்றது.

மேற்கிந்திய தீவுடனான போட்டிக்கு பின்னர் அடுத்த மாதம் நடுப்பகுதியில் இங்கிலாந்து அணி இலங்கையில் 3 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளது. மே மாதத்தில் அயர்லாந்துடன் ஒரு டெஸ்ட் போட்டியிலும் பங்கு கொள்கின்றது.

இந்த வருடத்தில் மே, ஜூன் மாதங்களில் இலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷில் 3 ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொள்ளவுள்ளது. இக்காலப்பகுதியில் T20 ஆசிய வெற்றிக் கிண்ண போட்டி தொடர் இலங்கையில் நடைபெறவுள்ளது.

இதனை தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுடன் T20 போட்டிகள் நடைபெறவுள்ளது. எல்.பீ.எல் இலங்கை போட்டி தொடரின் 2 ஆவது கட்டம் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ளது.

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இலங்கை அணி தென்னாப்பிரிக்க அணியுடனான 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும், 3 T20 போட்டிகளிலும் கலந்துக்கொள்ளவுள்ளது.

ஸ்கொட்லாந்து கிரிக்கெட் அணி செப்டம்பர் மத்திய காலப்பகுதியில் இலங்கை அணியுடனான 3 T20 போட்டிகளில் கலந்து கொள்வதற்கு நாட்டிற்கு வரவுள்ளது.

ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது. 

ஆப்கானிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக நவம்பர், டிசம்பர் மாதங்களில் இலங்கை வரவுள்ளது.

No comments:

Post a Comment