பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் பாரிஸ் நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை இருந்தவர் நிக்கோலஸ் சர்கோசி.
66 வயதான சர்கோசி, மூத்த நிதிபதியிடம் இருந்து வழக்கு தொடர்பான தகவல்களை சட்ட விரோதமாக பெற முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்றம் இன்று அவருக்கு ஓராண்டு தடை விதித்தது. மேலும், வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுக்க அவருக்கு உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சர்கோசிக்கு துணையாக செயல்பட்ட இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment