இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இடம்பெறுகின்ற காலத்தினுள் அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான வழிகாட்டல்கள் மற்றும் செயல் திட்டங்களை அனர்த்த முகாமைத்துவ நிலையமும், கல்வி அமைச்சும் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த வழிகாட்டல் திட்டத்திற்கமைவாக ஏதேனும் இடர் காரணமாக பரீட்சைக்கு தடைகள் ஏற்படுமிடத்து, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உடனடி தொலைபேசி இலக்கமான 117 க்கு அழைத்து இது தொடர்பாக அறிவிக்க முடியும்.
அத்துடன், பரீட்சை தொடர்பாக எழுகின்ற ஏதேனும் பிரச்சினைகளுக்கு 1911 என்று உடனடி தொலைபேசி இலக்கத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.
மேலும் பெப்ரவரி 28 முதல் மார்ச் 11 வரையிலான காலப்பகுதிக்குள், பரீட்சைத் திணைக்களத்தினால் 24 மணித்தியால அவசர ஒருங்கிணைப்பு அலுவலகமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பரீட்சை காலத்தினுள் எழுகின்ற ஏதேனும் பிரச்சினைகள் தொடர்பாக தொடர்பு கொள்ளக் கூடிய அதிகாரிகளின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பது பற்றியும் வழிகாட்டல்கள் மற்றும் செயல் திட்டங்களில் உட்படுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment