போகம்பறை சிறையிலுள்ள ஓல்ட்டன் தோட்ட தொழிலாளர்களை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவருமான பாரளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் ஆகியோர் இன்று (08) சென்று பார்வையிட்டனர்.
கடந்த மாதம் 16 ஆம் திகதி ஒல்ட்டன் தோட்ட முகாமையாளரை தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் எட்டு பெண்களும் ஒரு ஆணுமாக ஒன்பது பேர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை கண்டி போகம்பறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தோட்ட நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான முரண்பாட்டையடுத்து கடந்த 03 ஆம் திகதி முதல் தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுட்டு வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது.
மலையக நிருபர் இராமச்சந்திரன்
No comments:
Post a Comment