பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினரும், பிரபல தொழிலதிபருமான ஒலிவர் டசால்ட் (Olivier Dassault) ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 69.
அவரது மறைவிற்கு பிரான்ஸ் அதிபா் இமானுவல் மெக்ரோன் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
அதிநவீன போர் விமானமான ‘ரஃபேல்’ விமானங்கள், ஃபால்கன் ஜெட் விமானங்களை உற்பத்தி செய்யும் டசால்ட் நிறுவனம், லி ஃபிகாரோ பத்திரிகை உள்ளிட்ட பல்வேறு மிகப் பெரிய தொழில் நிறுவனங்களை சொந்தமாகக் கொண்ட செல்வாக்கு மிகுந்த குடும்பத்தின் வாரிசு ஒலிவர் டசால்ட்.
டசால்ட் குழுமத்தின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்த இவர், பிரான்ஸின் குடியரசுக் கட்சி சார்பில் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்தார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரா்கள் பட்டியலிலும் தொடர்ந்து ஒலிவியோ் டசால்ட் இடம்பிடித்திருந்தாா்.
இந்நிலையில், அவர் பயணித்த ஹெலிகொப்டர் கடந்த 7 ஆம் திகதி விபத்திற்குள்ளானது. இதில் அவரும் விமானியும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
ஒலிவர் டசால்ட் பயணம் செய்த AS-350 ஹெலிகொப்டா் தனியார் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், ஒலிவர் டசால்ட்டின் திடீா் மறைவிற்கு பிரான்ஸ் அதிபா் இமானுவேல் மெக்ரோன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
‘தொழிலதிபரும் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவருமான ஒலிவர் டசால்ட் மறைவு மிகப் பெரிய இழப்பு’ என்று அதில் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment