மைத்திரிக்கு எதிரான நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்றமே தீர்மானம், அவர் மீது திட்டமிட்ட குற்றச்சாட்டு எதுவுமில்லை என்கிறார் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Monday, March 1, 2021

மைத்திரிக்கு எதிரான நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்றமே தீர்மானம், அவர் மீது திட்டமிட்ட குற்றச்சாட்டு எதுவுமில்லை என்கிறார் அலி சப்ரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா? இல்லையா? என்பதை உயர் நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வந்த ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதா? இல்லையா? என்பதை உயர் நீதிமன்றமே தீர்மானிக்கும். இது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.

இதேவேளை, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு திட்டமிட்டே முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றம் சுமத்தியுள்ளது என விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்திலேயே இந்த விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது என்றார்.

No comments:

Post a Comment