அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு அறிக்கைக்கு எதிராக நான்கு முறைப்பாடுகள் - News View

About Us

About Us

Breaking

Monday, March 1, 2021

அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு அறிக்கைக்கு எதிராக நான்கு முறைப்பாடுகள்

அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பாக நான்கு வழங்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இறுதி அறிக்கை குறித்து விசாரணை நடத்தக் கோரி வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதிக்கு எழுத்துபூர்வகமாக முறைப்பாட்டினை தாக்கல் செய்துள்ளனர். 

சேனக பெரேரா, நாமல் ராஜபக்ஷ, அச்சலா செனவிரத்ன மற்றும் ஜெயரத்னராஜா தம்பிஐயா தம்பியா ஆகிய வழக்கறிஞர்களை இவ்வாறு முறைப்பாட்டினை அளித்துள்ளனர். 

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கடந்த டிசம்பர் மாதம் கையளிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன தலைமையில் மூன்று பேர் கொண்ட இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு 2020 ஜனவரி 09 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு, FCID, CID மற்றும் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவு ஆகிய நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் காரணமாக 2015 ஜனவரி 08 முதல் 2019 நவம்பர் 16 வரை அரசியல் பழிவாங்கலினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பின்னணி குறித்து விசாரணை செய்யும் பொறுப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment