வேறொரு முச்சக்கர வண்டியில் வந்த குழுவினரால் கடத்தப்பட்ட முச்சக்கர வண்டி - News View

Breaking

Post Top Ad

Saturday, March 27, 2021

வேறொரு முச்சக்கர வண்டியில் வந்த குழுவினரால் கடத்தப்பட்ட முச்சக்கர வண்டி

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ டின்சின் நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று இனந்தெரியாதவர்களினால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (27) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த முச்சக்கர வண்டி கடத்தப்பட்ட சம்பவம் டின்சின் நகரில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியினை வேறு ஒரு முச்சக்கர வண்டியில் வந்த குழுவினரே இவ்வாறு கடத்தி சென்றுள்ளதாகவும் கடத்தப்பட்ட முச்சக்கர வண்டி பலாங்கொட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற சிசிடிவி காணொளியினை வைத்து பொகவந்தலாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நேற்றைய தினம் நான்கு பேருந்துகளில் இருந்து 8 மின் கலன்கள் திருடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மலையக நிருபர் சதீஸ்குமார்

No comments:

Post a Comment

Post Bottom Ad