வயலுக்குச் சென்றவர் திடீர் மரணம் - கந்தளாய் பொலிஸ் பிரிவில் நம்பவம் - News View

Breaking

Post Top Ad

Saturday, March 27, 2021

வயலுக்குச் சென்றவர் திடீர் மரணம் - கந்தளாய் பொலிஸ் பிரிவில் நம்பவம்

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயலுக்குச் சென்ற ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் இன்று (27) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேராறு, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய சேகு இஸ்மாயில் பைசர் என்பவரே இவ்வாறு வயக்குச் சென்ற நிலையில் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் தற்போது வயல் வெளியில் காணப்படுவதோடு, குறித்த மரணம் மாரடைப்பு காரணமாக ஏற்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதாவது விதத்தில் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்ததோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

திருகோணமலை நிருபர் பாருக்

No comments:

Post a Comment

Post Bottom Ad