பாகிஸ்தான் புலனாய்வு நிறுவனம் விடுத்த அழைப்பாணைக்கு எதிராக வழக்கு - News View

Breaking

Post Top Ad

Saturday, March 27, 2021

பாகிஸ்தான் புலனாய்வு நிறுவனம் விடுத்த அழைப்பாணைக்கு எதிராக வழக்கு

பாகிஸ்தான் இலத்திரன் ஊடக ஒழுங்குமுறை அதிகார சபையின் முன்னாள் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான அப்சார் அலாம், தமது அண்மைய ட்விட்டர் பதிவுகள் மற்றும் சமூக ஊடக பதிவுகளுக்காக மத்திய புலனாய்வு நிறுவனம் விடுத்த அழைப்பாணைக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார்.

அலாமின் அண்மைய ட்விட்டர் பதிவுகளில் அரசியல் தலையீடுகள் தொடர்பில் நிர்வாகத்தை விமர்சித்திருந்தார்.

அரச எதிர்ப்பு கருத்துகளை வெளியிட்டதாக குற்றம்சாட்டி வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மத்திய புலனாய்வு நிறுவனத்தால் அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இதற்கு எதிராக அவர் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad