எம்.மனோசித்ரா
தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று திங்கட்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இன்று வரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் 3324 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான கண்காணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
சமூக இடைவெளியைப் பேணாமை, முகக் கவசம் அணியாமை உள்ளிட்டவை தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உலகலாவிய ரீதியில் கொவிட் அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்படுவதைப் போலவே இலங்கையிலும் காணப்படுகிறது.
எனவே அரச மற்றும் அரச சார்பற்ற அனைத்து நிறுவனங்களிலும் ஊழியர்களின் உடல் உஷ்ணத்தை பரிசோதித்தல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை தொடர்ச்சியாக பேண வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment