கொரோனா தொற்றினால் 3,000 தாதிகள் உயிரிழப்பு - மில்லியன் கணக்கானவர்கள் வேலையிலிருந்து விலக தீர்மானம்? - News View

Breaking

Post Top Ad

Friday, March 12, 2021

கொரோனா தொற்றினால் 3,000 தாதிகள் உயிரிழப்பு - மில்லியன் கணக்கானவர்கள் வேலையிலிருந்து விலக தீர்மானம்?

உலகில் சுமார் 3,000 தாதிகள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்திருப்பதாக சர்வதேச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனால் மனதளவில் பாதிப்படைந்த மில்லியன் கணக்கான தாதியர், வேலையிலிருந்து விலக எண்ணி வருவதாகக் கூறப்படுகிறது.

வைரஸ் தொற்றுச் சூழலின் முடிவில், மக்களின் பொது மருத்துவத் தேவைகளைக் கவனித்துக் கொள்ளக் குறைந்த அளவிலான அனுபவம் பெற்ற தாதியரே எஞ்சியிருப்பர் என சங்கம் எச்சரித்துள்ளது.

தாதியர் இதுவரை அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டதாக சங்கத்தின் தலைமை நிர்வாகி ஹாவர்ட் கட்டன் குறிப்பிட்டார். அதன் காரணமாக அதிகளவில் பலரும் வேலையை விட்டுச் செல்லக்கூடும் என்றார் அவர்.

ஒருவருக்குப் பயிற்சி கொடுத்துத் தாதியாக்குவதற்குச் சுமார் 4 ஆண்டுகள் வரை எடுக்கலாம்.

வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து நிறைந்த சூழலில் வேலை பார்க்கும் தாதியருக்குத் தடுப்பூசி போடப்படுவது அவர்களது முன்னுரிமை என்றும் கட்டன் குறிப்பிட்டார்.

வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு இல்லாமல் இருப்பது அவர்களை மனத்தளவில் மேலும் பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad