மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதன் முறையாக விஜயம் செய்தார் பொலிஸ்மா அதிபர் - News View

Breaking

Post Top Ad

Friday, March 12, 2021

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதன் முறையாக விஜயம் செய்தார் பொலிஸ்மா அதிபர்

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன நேற்று (11) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதன் முறையாக விஜயம் செய்தார்.

மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உயர் பொலிஸ் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் பொலிஸ்மா அதிபர் கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கந்தளாய் ஆகிய பொலிஸ் பிராந்தியங்களைச் சேர்ந்த பிரதி பொலிஸ்மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், மாகாணத்திலுள்ள 48 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலை 9.30 மணிக்கு ஆரம்பமான கலந்துரையாடல் பிற்பகல் 2.00 மணிக்கு முடிவடைந்த போதிலும் ஊடகவியலாளர்கள் குறித்த கலந்துரையாடலில் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad