கொரோனா தொடர்பான தகவல்களை மூடி மறைக்கும் தேவை அரசுக்கில்லை - ஹேஷா விதானகே MP யின் கேள்விக்கு சுதர்ஷனி பதில் - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 9, 2021

கொரோனா தொடர்பான தகவல்களை மூடி மறைக்கும் தேவை அரசுக்கில்லை - ஹேஷா விதானகே MP யின் கேள்விக்கு சுதர்ஷனி பதில்

கொரோனா தொடர்பாக எந்தத் தகவல்களையும் அரசாங்கம் மறைக்கவில்லை. அவ்வாறு தகவல்களை மூடி மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லையென கொரோனா தடுப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, கொரோனா தொடர்பான தகவல்களை அரசாங்கம் மூடி மறைப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே குறிப்பிட்ட நிலையில் அதற்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். 

இராஜாங்க அமைச்சர் அதன்போது மேலும் குறிப்பிடுகையில், நாங்கள் உண்மையான தகவல்களையே முன்வைக்கின்றோம். தகவல்களை மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை. 

சிலவேளை, தொற்றுக்குள்ளானோர் 10 நாட்களில் குணமடைந்து வீடு திரும்பலாம். ஒருபக்கத்தில் நோயாளர்கள் வருவதை போன்று மற்றைய பக்கத்தில் குணமடைகின்றனர். இதனால் உண்மைகளை மறைக்கவில்லையென்று தெளிவாகக் கூறிக் கொள்கின்றேன் என்றார்.

சம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad