வனுவாட்டு குடியரசில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 16, 2021

வனுவாட்டு குடியரசில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்

வனுவாட்டு குடியரசின் கடற்பகுதியில் 6.2 ரிச்டெர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டு நேரப்படி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12 மணியளவிலேயே வனுவாட்டுவின் தலைநகர் போர்ட்-விலாவிற்கு மேற்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தையடுத்து இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

வனுவாட்டுவில் முன்னதாக 7.7 ரிச்டெர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்ட ஒரு வாரத்திற்கு பின்னர் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வனுவாட்டு குடியரசு (Republic of Vanuatu) என்பது பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad