சட்ட விரோதமாக சொத்துக்களை விசாரணை செய்ய விசேட பிரிவு - News View

About Us

About Us

Breaking

Friday, February 19, 2021

சட்ட விரோதமாக சொத்துக்களை விசாரணை செய்ய விசேட பிரிவு

சட்ட விரோதமாக சொத்துக்களை சேகரித்த நபர்களின் சொத்து குறித்து விசாரிப்பதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் விசேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக (குற்றச் செயல்) சிசேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல், கறுப்பு பணம் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் மூலம் சேகரிக்கப்பட்ட சொத்துக்கள் இந்த பிரிவு மூலம் விசாரிக்கப்படவுள்ளன.

நாட்டிற்குள் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து குற்றச் செயல்களையும் தடுப்பதற்கு அமைச்சர் சரத் வீரசேகரவின் ஆலோசனைக்கு அமைய பொலிஸார் பாரிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்திருப்பதை கவனத்தில் கொண்டு மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்களை திருத்தும் மற்றும் வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களை முற்றுகையிடுவதற்கு விசேட நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment