ரஷ்யா தனது சொந்த தயாரிப்பான 'ஸ்புட்னிக் வி-19' தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பதற்கு அனுமதியளித்துள்ளது.
ஸ்பூட்னிக் வி தடுப்பூசி ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்தியா மற்றும் ரஷ்யா 300 மில்லியன் ரஷ்ய தடுப்பூசியை இந்திய ஆய்வகங்களில் தயாரிக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
சீன மற்றும் ரஷ்ய மருந்துகளை அதிக செயல்திறன் அளவைக்காட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கீகாரம் அளித்துள்ளார்.
ஆனால் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தடுப்பூசிகளையும் அவசரகால அல்லது வழக்கமான பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ள இன்னும் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை சீன அரசு தனது தயாரிப்பு சினோபோர்மின் தடுப்பூசிகள் 300,000 ஐ இலங்கைக்கு இலவசமாக வழங்க தயாராக உள்ளது என்று சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித கொஹன தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒப்புதல் வழங்கியதும் சீனத் தயாரிப்பு தடுப்பூசி இலங்கைக்கு அனுப்பப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment