ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கும் அவரது அறிக்கைக்கும் எதிராக இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிடும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் காரணமாக நாங்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கை கடந்த காலங்களை போல உண்மை மற்றும் அர்ப்பணிப்புகளுக்காக உறுதியுடன் நிற்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையை எதிர்கொள்வதற்கு நாங்கள் அனைத்தை நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம் வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் நிலைப்பாட்டை முன்வைத்து ஐந்து நிமிடங்கள் உரையாற்றுவார்.
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு பதில் அறிக்கையை நாங்கள் தயாரித்து வருகின்றோம் எனவும் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment