சவேந்திர சில்வா விடயத்தில் இரட்டை நிலைப்பாடு, அமைச்சர் சரத் வீரசேகர குறித்தும் பொய்யான அறிக்கை - புலிகள் அமைப்பின் கைப்பாவையாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் என்கிறார் உதய கம்மன்பில - News View

Breaking

Post Top Ad

Saturday, February 6, 2021

சவேந்திர சில்வா விடயத்தில் இரட்டை நிலைப்பாடு, அமைச்சர் சரத் வீரசேகர குறித்தும் பொய்யான அறிக்கை - புலிகள் அமைப்பின் கைப்பாவையாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் என்கிறார் உதய கம்மன்பில

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் பிரிவினைவாத விடுதலைப் புலிகள் அமைப்பின் கைப்பாவையென அமைச்சர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார். 

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் கடற்படையில் கடமையாற்றிய ரியர் அட்மிரல் சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளமைக்கும் குற்றம் சுமத்தியுள்ளனர். அரசியலுக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு பின்னரே அவர் அமைச்சர் பதவிக்கு வந்துள்ளார்.

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு உலகம் முழுவதும் கிடைக்கும் சிவில் உரிமையை இரத்துச் செய்ய மனித உரிமை ஆணையாளர் யோசனை முன்வைக்கின்றாரா? என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது. 

அமைச்சர் சரத் வீரசேகர கடந்த பொதுத் தேர்தலில் 03 இலட்சத்து 28 ஆயிரம் வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது மிகப் பெரிய மக்கள் ஆணை. 

சவேந்திர சில்வா போர்க் குற்றங்களில் ஈடுபட்டாரென்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் தமிழ்ப் பிரிவினைவாதிகளால் கடந்த 12 ஆண்டுகளாக போர்க் குற்றத்திற்கான சாட்சியங்களை முன்வைக்க முடியவில்லை.

இப்படியான பின்னணியிலேயே மனித உரிமை ஆணையாளர் போர்க் குற்றவாளியென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவை கூறுகிறார். 

கடந்த அரசாங்கம் அவரை இராணுவ தளபதியாக நியமிக்கும் போது அது நல்லது. எமது காலத்தில் அவர் இராணுவத் தளபதியாக செயற்படுவது கெடுதியானது. இது மனித உரிமை ஆணையாளரின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது.

மனித உரிமை ஆணைக்குழுவில் கொண்டுவரப்படும் யோசனையை முற்றாக நிராகரிக்க அரசாங்கம் தீர்மானித்ததை நாங்கள் தலை வணங்கி வரவேற்கின்றோமெனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

சுப்பிரமணியன் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad