இலஞ்ச குற்றச்சாட்டு - ரவி, அர்ஜுன் அலோசியஸ் குற்றப்பத்திரம் வழங்கப்பட்டு பிணையில் விடுதலை - News View

About Us

About Us

Breaking

Friday, February 5, 2021

இலஞ்ச குற்றச்சாட்டு - ரவி, அர்ஜுன் அலோசியஸ் குற்றப்பத்திரம் வழங்கப்பட்டு பிணையில் விடுதலை

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோர் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்பத்திரம் வழங்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள சொகுசு தொடர்மாடி வீட்டை வழங்கியமை மற்றும் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த இருவருக்கு குற்றப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று (05) குறித்த இருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் வழங்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை தலா ரூ. 5 இலட்சம் கொண்ட ரொக்கப் பிணை மற்றும் ரூ. 50 இலட்சம் கொண்ட சரீரப் பிணையின் அடிப்படையில் விடுவிக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே உத்தரவிட்டார்.

பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன பிணை மோசடி வழக்குடன் தொடர்புபட்ட வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான அர்ஜுன் அலோசியஸின் பெயரில் பெறப்பட்டிருந்த, கொள்ளுபிட்டியிலுள்ள சொகுசு தொடர்மாடிக் குடியிருப்பில், கடந்த 2016 பெப்ரவரி 12 முதல் செப்டெம்பர் 30 வரை தங்கியிருந்ததன் மூலம், இலஞ்ச, ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக, குறித்த காலப் பகுதியில் நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க மீதும், அதனை வழங்கியமை தொடர்பில் அர்ஜுன் அலோசியஸ் மீதும் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment