இலங்கை வந்தது பாகிஸ்தான் பிரதமரின் பாதுகாப்பு பிரிவு - கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒத்திகை நிகழ்வு - News View

About Us

About Us

Breaking

Friday, February 19, 2021

இலங்கை வந்தது பாகிஸ்தான் பிரதமரின் பாதுகாப்பு பிரிவு - கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒத்திகை நிகழ்வு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமரை வரவேற்பதற்காக விசேட இராணுவ மரியதை அணிவகுப்பு நடத்தப்படவுள்ளது. 

இது தொடர்பான ஒத்திகை நிகழ்வு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று இடம்பெற்றது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று அங்கு சென்று ஒத்திகை நிகழ்வு வேலைத்திட்டத்தை பார்வையிட்டார்.

பாகிஸ்தான் பிரதமரின் விஜய செயற்பாடுகளுக்காக இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு மற்றும் அரச அதிகாரிகளுடன் அமைச்சர் இன்று கலந்துரையாடினார்.

No comments:

Post a Comment