கடந்த வருடம் (2020) இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளில் மாணவர்களை இணைப்பது தொடர்பான நடவடிக்கை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
பாடசாலைகளில் மாணவர்களை இணைப்பது தொடர்பான வெட்டுப் புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் வந்ததையடுத்து, குறித்த முடிவை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதற்கமைய, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்க்கும் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
No comments:
Post a Comment