தூங்கிக் கொண்டிருந்தவரை தூக்கி வீசி கொண்ற காட்டு யானை! - News View

About Us

About Us

Breaking

Sunday, February 7, 2021

தூங்கிக் கொண்டிருந்தவரை தூக்கி வீசி கொண்ற காட்டு யானை!

கஹடகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முக்கிரியாவ பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (06) 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு யானையின் தாக்குதலினால் உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, முக்கிரியாவ பகுதியில் வயல் காவலுக்காக இரண்டு பேர் சென்று உயரமான குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த போது யானை உறங்கிக் கொண்டிருந்த நபரை இழுத்து வீசியதாகவும் மற்றையவர் தப்பிச் சென்றதாகவும் தெரிய வருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது சம்பவ இடத்திலிருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

விசாரணையின் பின்னர் சடலம் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கஹடகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை நிருபர் பாருக்

No comments:

Post a Comment