இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் - நிதியுதவி வழங்கிய அமெரிக்க விளையாட்டு வீரர் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 7, 2021

இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் - நிதியுதவி வழங்கிய அமெரிக்க விளையாட்டு வீரர்

இந்தியாவில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் மருத்துவச் செலவுக்காக அமெரிக்க விளையாட்டு வீரர் ஜூஜூ ஸ்மித் சூஸ்டர் 10,000 அமெரிக்க டொலர்கள் நிதியுதவி வழங்கி உள்ளார்.

இந்திய மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 73 ஆவது நாளாக விவசாயிகள் மிகுந்த உறுதியுடன் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

போராட்டத்தின் அடுத்த கட்டமாக இன்று 'சக்கா ஜாம்' என்ற பெயரில் நாடு முழுவதும் வீதி மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் மருத்துவச் செலவுக்காக 10,000 அமெரிக்க டொலர்கள் நிதியுதவி செய்துள்ளதாக அமெரிக்க கால்பந்து லீக் (என்எஃப்எல்) வீரர் ஜூஜூ ஸ்மித் சூஸ்டர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவில் அவர் கூறியதாவது, உயிர்களைக் காப்பதற்காக, இந்தியாவில் உள்ள விவசாயிகளின் மருத்துவச் செலவுக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் நிதியுதவி வழங்கி உள்ளேன். இதன் மூலம் எந்தவொரு உயிர் இழப்பையும் நாம் தடுக்க முடியும் என எண்ணுகிறேன் என்று கூறி விவசாயிகள் போராட்டம் குறித்த ஒரு செய்தியையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment