பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் உள்ள பொகவந்தலாவை செபல்டன் தோட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதில் ஒரு தொற்றாளர் கடந்த தினம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர் ஜே.கணேஸ் தெரிவித்தார்.
ஹட்டன் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவருக்கு முதலில் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பின்னர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணியாக பணி புரிந்து வரும் அவரின் கணவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றுக்குள்ளான குறித்த சட்டத்தரணியின் 74 வயதுடைய தந்தை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த தினம் உயிரிழந்தார்.
இந்நிலையில் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் மற்றுமொரு மகனுக்கு நேற்று (06) கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment