இந்திய சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக காதல் தகராறில் 7 பேரை கொன்ற பெண்ணுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
இது குறித்து தெரிய வருவதாவது, உத்தரப் பிரதேசத்தின் அம்ரோகா நகரைச் சேர்ந்தவர் ஷப்னம், சலீம் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு ஷப்னமின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஷப்னம், கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காதலருடன் சேர்ந்து தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை கொடூரமாக கோடரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த்து.
இதைத் தொடர்ந்து ஷப்னமையும், சலீமையும் பொலிஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் 2 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதை அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010 ஆம் ஆண்டும், உயர் நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டும் உறுதி செய்துள்ளன.
மேலும் ஷப்னம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
மதுராவில் உள்ள சிறையில் பெண்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற தனி அறை உள்ளது. இந்த அறை 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பெண் குற்றவாளிகள் எவரும் தூக்கிலிடப்படவில்லை. மதுராவில்தான் ஷப்னத்துக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment