எல்லைக் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ள பிரான்ஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, February 1, 2021

எல்லைக் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ள பிரான்ஸ்

பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் எல்லைக் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் இருந்து அவசியமற்ற பயணங்களுக்கு தடை விதித்திருக்கும் பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருக்கும் பயணிகளுக்கு வைரஸ் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் தற்போது அமுலில் இருக்கும் இரவு நேர ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படுவதோடு பெரிய கடைத் தொகுதிகள் மூடப்படும் என்று பிரதமர் ஜீன் கொஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பொருளாதாரத்திற்கு சாதகமாக மிதமான போக்குடையது என்று கூறப்படுகிறது. இதனால் நோயை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம் என்று சில மருத்துவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

கொரோனா தொற்றினால் அதிக உயிரிழப்பு பதிவாகி இருக்கும் நாடுகளில் ஆறாவது இடத்தில் இருக்கும் பிரான்ஸில் 75,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் பெருந்தொற்றினால் 3,000 க்கும் அதிகமானோர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு மொத்தம் 25,000 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது பிரான்ஸில் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் 10 வீதத்தினர் பிரிட்டனில் அடையாளம் காணப்பட்ட புதுவகைக் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment