மேற்கிந்திய தீவுகள் அணியுடனான சுற்றுப் பயணத்திற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக, இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பதவியில் இருந்த டேவிட் சேகர் இராஜினாமா செய்ததை அடுத்து, இலங்கை அணிக்கு சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
47 வயதான சமிந்த வாஸ், இலங்கை தேசிய அணி மற்றும் வளர்ந்து வரும் இலங்கை அணி ஆகியவற்றுக்கு ஏற்கனவே வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சமிந்த வாஸ் 355 விக்கெட்டுகளையும், 322 ஒரு நாள் போட்டிகளில் 400 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இலங்கை எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளை நோக்கி பயணிக்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில், 3 ரி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணியுடனான கிரிக்கெட் சுற்றுப் பயணத்திற்கான இலங்கை அணியின் பெயர்ப் பட்டியில் இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய தெரிவுக் குழுவில் மீதமுள்ள இரண்டு உறுப்பினர்களான, பிரமோதய விக்ரமசிங்க மற்றும் சமிந்த மெண்டிஸ் ஆகியோரால், அவ்வணிக்கான வீரர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்தார்.
No comments:
Post a Comment