கொழும்பின் புறநகர் பகுதிகளில், நாளை (20) முற்பகல் 8.00 மணி முதல் 16 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடை அமுலில் இருக்கும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
தெஹிவளை - கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் இரத்மலானை பகுதியிலும் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய, நாளை (20) முற்பகல் 8.00 மணி முதல் மறுநாள் (21) நண்பகல் 12.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என, சபை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment