இழப்பீட்டுக்கான அலுவலகம் தொடர்ந்தும் முறையாக செயற்பட வேண்டும் - கேர்னல் ரத்னப்பிரிய பந்து - News View

Breaking

Post Top Ad

Monday, February 15, 2021

இழப்பீட்டுக்கான அலுவலகம் தொடர்ந்தும் முறையாக செயற்பட வேண்டும் - கேர்னல் ரத்னப்பிரிய பந்து

(நா.தனுஜா)

நாட்டில் இடம்பெற்ற இன மோதல்கள் மற்றும் போர் ஆகியவற்றின் போது பலர் காணாமல் போயிருக்கின்றார்கள். எனவே அதற்கான இழப்பீட்டைப் பெறுவதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் பலர் நாட்டில் இருக்கின்றார்கள் என்பதை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கான இழப்பீட்டை வழங்குவதற்கு இழப்பீட்டுக்கான அலுவலகம் தொடர்ந்தும் முறையாக செயற்பட வேண்டியது அவசியமாகும் என்று அந்த அலுவலகத்தின் முன்னாள் உறுப்பினர் கேர்னல் ரத்னப்பிரிய பந்து தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் கூறியதாவது, இலங்கை ஒரு சிறந்த நாடு என்றாலும் கூட, இங்கு திறமையானவர்களுக்கும் தகுதி வாய்ந்தவர்களுக்கும் இடமளிக்காத நிலையொன்று காணப்படுகின்றது. அதன் காரணமாக தற்போது நான் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் உறுப்பினர் என்ற அந்தஸ்த்தைக் கொண்டிருக்கவில்லை.

எனினும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் செயற்பாடுகளைப் பொறுத்த வரையில் முதலில் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பது போரின் போது காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கானது மாத்திரமல்ல. 

மாறாக கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற இன மோதல்கள் மற்றும் வேறு சில சந்தர்ப்பங்களில் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கும் இழப்பீட்டை வழங்குவதற்கான பொறுப்பைக் கொண்டிருக்கிறது.

ஆகவே இங்கு இழப்பீட்டைப் பெறுபவர்கள் என்ற பதத்தையும் அதற்குள் உள்ளடங்கும் தரப்பினர் குறித்தும் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். 

நாட்டில் இடம்பெற்ற இன மோதல்கள், போர் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு இழப்பீட்டைப் பெறுவதற்குத் தகுதிஎவாய்ந்தவர்கள் இருக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். 

எனவே அவர்களுக்கான இழப்பீட்டை வழங்குவதற்கு இழப்பீட்டுக்கான அலுவலகம் தொடர்ந்தும் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad