உள்ளூர் நிர்வாகத்தை வலுப்படுத்த இந்த ஆண்டு இறுதிக்குள் எலக்ரோனிக் கிராம நிலதாரி திட்டம் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்திலுள்ள யட்டினுவர பிரதேச செயலகத்தில் 825 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஐந்து மாடி புதிய கட்டிடத்தை நேற்றுமுன்தினம் (17) திறந்து வைத்து பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் உள்ளூர் நிர்வாகத்தை வலுப்படுத்த இந்த ஆண்டு இறுதிக்குள் எலக்ரோனிக் கிராம நிலதாரி திட்டம் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்படும்.
பொது சேவைகளை வழங்குவதில் கிராமப்புற தகவல்கள் மிக முக்கியமானது என்பதால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் கீழ் கிராம சேவையாளர்களுக்கு கணினி வசதிகள் வழங்கப்படும்.
மேலும் இந்த திட்டத்திற்கு மேலதிகமாக நில உரிமையை சட்டப்பூர்வமாக்குவதற்கும் பாதுகாப்பதற்கும் இ-லேண்டிங் என்ற திட்டமொன்றும் செயற்படுத்தப்படும். மேலும் இத் திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் ஏற்கனவே கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நில மதிப்புகளை மதிப்பிடுவதில் முறையான வழிமுறை இல்லாததால் நாட்டின் அனைத்து நிலங்களையும் மதிப்பீடு செய்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவர், எதிர்காலத்தில் அனைத்து நிலங்களும் மாவட்ட அளவில் முன்கூட்டியே மதிப்பீடு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார். இது நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகளை நீக்கும்.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே அமைச்சர் அனுராத ஜெயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாபா பண்டார, மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சரத் ஏகநாயக்க, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன், யட்டினுவர பிரதேச செயலாளர் இந்திக அனுருத்த பியதாச மற்றும் அரச அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment