(நா.தனுஜா)
மியன்மாரில் ஜனநாயக நிர்வாகத்தைக் கவிழ்த்து இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளமை இலங்கைக்கு விடுக்கப்படும் ஒரு சிவப்பு எச்சரிக்கை என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, 'சிவில் மற்றும் நிர்வாக அதிகாரங்களை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் போது, மக்கள் ஆணைக்கு வலுச்சேர்க்கின்ற தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் செயற்பாடுகளை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு அவர்கள் முற்படுவதைத் தவிர்க்க முடியாது. இது மியன்மாரில் இருந்து இலங்கைக்கு விடுக்கப்படும் ஒரு சிவப்பு எச்சரிக்கையாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment