நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தனது குற்றச்சாட்டு தொடர்பாக உயர் நீதிமன்றல் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்யுமாறு கோரியே அவர் உயர் நீதிமன்றில் தனது வழக்கறிஞர் மூலமாக அவர் இந்த மனுத் தாக்கல் செய்துள்ளார்.
2007ஆம் ஆண்டு பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்ட விதிகளின் அடிப்படையில், ICCPR சட்டம் பிரிவு 4 (2) இற்கு அமைய, குற்றத்தின் காரணமாக தண்டனை பெறும் எந்த ஒருவரும் அதனிலும் பார்க்க உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உரிமை உண்டு என்பதன் அடிப்படையில், ரஞ்சன் ராமநாயக்க தனது குற்றச்சாட்டுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உச்சநீதிமன்றத்தில் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அத்துடன், ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை வெற்றிடமாகியுள்ளதாக சட்டமா அதிபர் பாராளுமன்ற செயலாளர நாயகத்திற்கு அறிவித்துள்ள நிலையில், அதற்கு எதிராக அரசியலமைப்பின் 89 (ஈ) பிரகாரம் தமது பாராளுமன்ற உறுப்புரிமையானது வெற்றிடமாகியுள்ளதாக, தேர்தல்கள் செயலத்திற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவிப்பதை தடுக்குமாறு கோரி மற்றுமொரு ரிட் மனுவொன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, பெரும்பான்மையான நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஊழல்வாதிகள் என வெளியிட்ட கருத்துகளினூடாக நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி வழக்குத் தொடுநர் சட்டமா அதிபர் தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளியாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை அறிவித்து அவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனையை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் பிறப்பித்தனர்.
No comments:
Post a Comment