சுய தனிமைப்படுத்தலிலிருந்த தென் மாகாண ஆளுநருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 2, 2021

சுய தனிமைப்படுத்தலிலிருந்த தென் மாகாண ஆளுநருக்கு கொரோனா

தென் மாகாண ஆளுநர் விலீ கமகே கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளார். அதற்கமைய, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது ஆளுநர் இவராவார்.

அவரது பிரத்தியேக செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆளுநர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளான நிலையில், மேற்கொண்ட PCR சோதனையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தற்போது அவர், தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு (IDH) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை இலங்கையில் 7 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முறையே பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ரஊப் ஹக்கீம், வாசுதேவ நாணயக்கார, பியல் நிஷாந்தா டி சில்வா, பவித்ரா வன்னியராச்சி, வசந்தா யாபா பண்டாரா, அருந்திக பெனாண்டோ ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.

இதில் இறுதியாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா கடந்த ஜனவரி 28ஆம் திகதி குணமடைந்து வீடு திரும்பியதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றியு முதல் 4 பாராளுமன்ற உறுப்பினர்களுகம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment