நேரடி வெளிநாட்டு முதலீடு இவ்வருடம் 2.5 பில்லியன் அமெரிக்க டொலராக அமையும் என எதிர்பார்க்கிறோம் - அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 28, 2021

நேரடி வெளிநாட்டு முதலீடு இவ்வருடம் 2.5 பில்லியன் அமெரிக்க டொலராக அமையும் என எதிர்பார்க்கிறோம் - அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால்

(இராஜதுரை ஹஷான்)

நேரடி வெளிநாட்டு முதலீடு இவ்வருடம் 2.5 பில்லியன் அமெரிக்க டொலராக அமையும் என எதிர்பார்க்கிறோம். இந்நிதியை பெற்றுக் கொள்வதில் ஏதேனும் தடைகள் காணப்படுமாயின் அதனை ஆராய்ந்து அதற்கு தீர்வு காண நிதியமைச்சின் செயலாளரின் கண்காணிப்பில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது என நிதி மூலதனச்சந்தை, அரச தொழில் வளங்கள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

நிதியமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் கடந்த வருடம் 1000 பில்லியன் பெறுமதியான இறக்குதிகள் நிறுத்தப்பட்டன. இவ்வருடம் இதனை ஒன்றரை பில்லியன் டொலரபாக அதிகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

குறிப்பாக எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுமாயின் இறக்குமதிகளின் பெறுமதி அதிகரிக்க கூடிய வாய்ப்பு உள்ளது. இதனால் இவ்வருடத்திற்கு மாத்திரம் இறக்குமதிகளுக்காக பதினேழரை பில்லியன் நிதி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு முதலீடுகளுக்கு மேலதிகமாக இறக்குமதி மற்றும் இதர தேவைகளுக்கான அவசர கால தேவைக்காக நிதி ஒதுக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. இதற்காக மேலதிகமான 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரச முறை கடன்களை செலுத்த 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்ய முடியும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வி, சுகாதாரம், மற்றும் வெளிநாட்டு சுற்றுலாத்துறை பயணம் ஆகியவற்றுக்காக 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தனியார் துறைசார்ந்ந முதலீடுகளுக்காக 1.4 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிதி முகாமைத்துவம் ஊடாக அரச கடன்களை நெருக்கடியில்லாமல் செலுத்த முடியும்.

இதற்காக அரச மற்றும் தனியார் தரப்பினருடன் ஒன்றினைந்த நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசிய உற்பத்திகளை மேம்படுத்த உரிய திட்டங்கள் அரச மற்றும் தனியார் துறையினருடன் முன்னெடுடுக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment