அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் கோட்டாபயவுக்கே தலைமைத்துவம் - SLPP இளைஞர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Friday, January 15, 2021

அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் கோட்டாபயவுக்கே தலைமைத்துவம் - SLPP இளைஞர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன

அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கே நாட்டின் தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

ஹோமாகவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தன்னிறைவடைந்த பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்பார்பாகும். தொழிலின்மையை நீக்கி புதிய தொழில் வாய்ப்புகளையும் புதிய முயற்சியாளர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளது. 

கொவிட் நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டு தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்த அரசாங்கம் பல்வேறுத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

கொவிட்19 தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி முதல் நடவடிக்கையாக எமது நாட்டின் உயிர்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார். 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கே நாட்டின் தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தால் நாசமாக்கப்பட்ட பொருளாதாரத்துக்கு புத்துயிர் கொடுக்க சமகால அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளதுடன், இளைஞர்களை புதிய தொழில் முனைவோராக மாற்றியமைப்பதற்கான செயற்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment