20 லட்சத்து 16 ஆயிரத்து 69 பேர் பலி, கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்து 24 ஆயிரத்து 475 பேருக்கு தொற்று - உலகை புரட்டி எடுக்கும் கொரோனா - News View

About Us

About Us

Breaking

Friday, January 15, 2021

20 லட்சத்து 16 ஆயிரத்து 69 பேர் பலி, கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்து 24 ஆயிரத்து 475 பேருக்கு தொற்று - உலகை புரட்டி எடுக்கும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள் \ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோதும் கொரோனா வைரஸ் உருமாறி வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 ஆயிரத்து 251 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவற்றில், அதிகபட்சமாக அமெரிக்காவில் 3 ஆயிரத்து 415 பேரும், இங்கிலாந்தில் 1 ஆயிரத்து 280 பேரும், பிரேசிலில் 1 ஆயிரத்து 131 பேரும், ஜெர்மனியில் 1 ஆயிரத்து 40 பேரும், இந்தியாவில் 191 பேரும் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர்.

அந்த வகையில் உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 20 லட்சத்து 16 ஆயிரத்து 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 42 லட்சத்தை கடந்துள்ளது.

குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7 லட்சத்து 24 ஆயிரத்து 475 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவற்றில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 933 பேருக்கும், பிரேசிலில் 68 ஆயிரத்து 138 பேருக்கும், இங்கிலாந்தில் 55 ஆயிரத்து 761 பேருக்கும், இந்தியாவில் 15 ஆயிரத்து 590 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 9 கோடியே 42 லட்சத்து 45 ஆயிரத்து 437 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வைரஸ் பரவியவர்களில் 2 கோடியே 49 லட்சத்து 30 ஆயிரத்து 249 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 683 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனாவில் இருந்து 6 கோடியே 70 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். 

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்
அமெரிக்கா - 4,01,469
பிரேசில் - 2,08,291
இந்தியா - 1,51,918
மெக்சிகோ - 1,37,916
இங்கிலாந்து - 87,295
இத்தாலி - 81,325
பிரான்ஸ் - 69,949
ரஷியா - 64,495

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்
அமெரிக்கா - 2,40,76,309
இந்தியா - 1,05,27,683
பிரேசில் - 83,94,253
ரஷியா - 35,20,531
இங்கிலாந்து - 33,16,019

No comments:

Post a Comment