கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தைத் தயாரிக்க ஜனாதிபதி ஆலோசனை - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 5, 2021

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தைத் தயாரிக்க ஜனாதிபதி ஆலோசனை

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுக நகரத்தை இந்திய உபகண்டத்திற்கும், தென்கிழக்காசியாவுக்கும் சேவைகளை வழங்கும் பரந்துப்பட்ட வலையமைப்பை கொண்ட சிறந்த வலய மையமாக அமைக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய அரசாங்கம் எதிர்பார்க்கும் கட்டமைப்புக்கு பொருத்தமான வகையில் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்ட நிபுணர்களுக்கு ஆலோசனை வழங்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

சுபீட்சமான எதிர்காலம் அரசாங்கத்தின் கொள்கை திட்டத்துக்கு அமைய கொழும்பு துறைமுக நகரம் இந்திய உபகண்டத்திற்கும் தென்கிழக்காசியாவுக்கும் சேவைகளை வழங்குவதற்கு பரந்துபட்ட விடயதானங்களுடன் கூடிய விசேட பொருளாதார வலயம் மற்றும் சேவைகள் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்ட சிறந்த வலய மையமாக மாற்ற கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு சிறந்த கட்டமைப்புடன் கூடிய போட்டித்தன்மையான சட்ட வரையறை கொண்ட வரி மற்றும் தரக்கட்டுப்பாடுகள் மற்றும் பிணக்குகளுக்குத் தீர்வு காணும் பொறிமுறை மூலம் முதலீட்டாளர்கள், தொழில் முயற்சியாளர்கள், பங்குதாரர்கள், கம்பனிகள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றை கவர்ந;து டுபாய், சிங்கப்பூர் மற்றும் ஹொங்க்ஹொங் ஆகிய நாடுகளின் முதலீட்டு கேந்திர நிலையங்கள் போட்டித்தன்மையுடன் செயற்படக் கூடிய வகையில் வசதியளிக்கும் ஆர்வமிகுந்த சூழலை தோற்றுவிக்க வேண்டியுள்ளது.

இதற்கு தேசிய தேவைகள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களைக் ஈர்க்கும் வகையில் அரசாங்கம் எதிர்பார்க்கும் கட்டமைப்புக்குப் பொருத்தமான வகையில் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்ட நிபுணர்களுக்கு ஆலோசனை வழங்க ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment