ஜனாதிபதி துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்குவது சிறந்தது - தகனமா, அடக்கமா தற்போது தீர்மானம் எடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது : எஸ்.பி. திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 5, 2021

ஜனாதிபதி துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்குவது சிறந்தது - தகனமா, அடக்கமா தற்போது தீர்மானம் எடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது : எஸ்.பி. திஸாநாயக்க

(இராஜதுரை ஹஷான்)

மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்பினர் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து ஜனாதிபதி உரிய கவனம் செலுத்த வேண்டும். சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு ஆகவே துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்குவது சிறந்தது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கணடவாறு குறிப்பிட்டார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் சிறந்த நடவடிக்கைகளை ஆரம்பத்தில் இருந்து முன்னெடுத்து வருகிறது. பூகோளிய மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொவிட் தாக்கத்தில் இருந்து விடுபடுவது சுலபமான காரியமல்ல. எம்மை காட்டிலும் பலம் மிக்க நாடுகள் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல்களை தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்று தற்போது தீர்மானம் எடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. ஏனெனில் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல் தகனம் செய்யப்படும் என விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கொவிட்-19 வைரஸ் தாகக்த்தினால் உயிரிழக்கும் முஸ்லிம் சமூகத்தினரது உடல் தகனம் செய்யும் போது அவர்களின் மத உரிமை மீறப்படுகிறது என குறிப்பிடப்படுகிறது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் முஸ்லிம் சமூகத்தினர் மாத்திரம் இறக்கவில்லை. ஏனைய மத்தினரும் இறந்துள்ளார்கள். 

கொவிட் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் உடல் தகனம் செய்யப்படும் போது இந்து, பௌத்தம் மற்றும் கத்தோலிக்கம் ஆகிய மதத்தினரது இறுதிக் கிரியைகள் முன்னெடுக்கப்படுவதில்லை. இதனால் பிற மதத்தவர்கள் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் மதத உரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்க முடியாது. சுகாதார தரப்பினரது தீர்மானங்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என மதத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில் அரசாங்கம் சுகாதார தரப்பினரது தீர்மானத்துக்கே முன்னுரிமை வழங்கும்.

பாரத லக்ஷமன் கொலை வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. துமிந்த சில்வாவிற்கு முதலில் துப்பாக்கி சூடுபட்டு அவர் கீழே விழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. துமிந்த சில்வாவின் விடுதலை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு ஜனாதிபதி உரிய கவனம் செலுத்த வேண்டும். துமிந்த சில்வாவின் விடுதலை வரவேற்கத்தக்கது என்றார்.

No comments:

Post a Comment