சதொச இரு மோசடி குற்றச்சாட்டுகள் : அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - இனி தொடராதென நீதிமன்றம் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, January 15, 2021

சதொச இரு மோசடி குற்றச்சாட்டுகள் : அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - இனி தொடராதென நீதிமன்றம் அறிவிப்பு

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை இனிமேல் தொடர மாட்டோமென கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2010 - 2014 வரை வர்த்தக அமைச்சராக செயற்பட்ட போது ச.தொ.ச நிறுவனத்தின் 153 ஊழியர்களை அவருடைய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியதோடு, அதனால் அரசாங்கத்திற்கு 04 கோடி ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந் நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு முறையானது, சட்டத்திற்கு முரணானதென கடந்த ஒக்டோபர் மாதம் தீர்பளித்த கொழும்பு மேல் நீதிமன்றம் இவ் வழக்கை தள்ளுபடி செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment