தனிமைப்படுத்தலுக்கு உட்படுவோரது வீடுகளுக்கு அருகே சிவில் உடையில் பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Monday, January 18, 2021

தனிமைப்படுத்தலுக்கு உட்படுவோரது வீடுகளுக்கு அருகே சிவில் உடையில் பொலிஸார்

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் சுகாதார பிரிவு வழங்கியுள்ள ஆலோசனைகளை சரியான ரீதியில் பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பில் அவதானிப்பதற்காக அவர்களது வீடுகளுக்கு அருகில் சிவில் உடையில் பொலிஸாரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்வதாக கிடைக்க பெற்ற தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 116,000 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களில் அதிகமானவர்கள் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சிலர் சுகாதார பிரிவின் ஆலோசனைகளை மீறி இரவு நேரங்களில் வெளியில் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment