14 வருடங்களின் பின்னர் பாகிஸ்தான் சென்றடைந்தது தென்ஆபிரிக்க கிரிக்கெட் அணி! - News View

About Us

About Us

Breaking

Monday, January 18, 2021

14 வருடங்களின் பின்னர் பாகிஸ்தான் சென்றடைந்தது தென்ஆபிரிக்க கிரிக்கெட் அணி!

இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென் ஆபிரிக்கா அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. 

இலங்கை அணி பாகிஸ்தான் சென்று விளையாடும்போது பயங்கரவாதிகள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பேருந்து மீது எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்தினர். இதில் சில வீரர்கள் காயம் அடைந்தனர். 

அதில் இருந்து பெரும்பாலான அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்தது. தற்போது வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது. 

தென் ஆபிரிக்க அணி இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நேற்றுமுன்தினம் பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது. 

இதற்கு முன் தென் ஆபிரிக்க அணி கடந்த 2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்றிருந்தது. அதன்பின் தற்போது பாகிஸ்தான் சென்றுள்ளது. 

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கராச்சியில் இம்மாதம் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையிலும், 2ஆவது டெஸ்ட் ராவல் பிண்டியில் பெப்ரவரி 4ஆம் திகதியில் இருந்து 8ஆம் திகதி வரையிலும் நடக்கிறது. ரி 20 கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 11ஆம் திகதி தொடங்குகிறது. 

தென் ஆபிரிக்க பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய இராச்சியத்தில் 2010 மற்றும் 2013 இல் சுற்றுப் பயணம் செய்து விளையாடியுள்ளது.

No comments:

Post a Comment