அக்கரைப்பற்று பள்ளிவாசல்களை மீள திறப்பதற்கான ஆலோசனைக்கூட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 5, 2021

அக்கரைப்பற்று பள்ளிவாசல்களை மீள திறப்பதற்கான ஆலோசனைக்கூட்டம்

நூருள் ஹுதா உமர்

கொரோனா தொற்று நாட்டுக்குள் ஊடுருவியதன் பின்னர் அரசாங்க உத்தரவுகளையும், சுகாதார வழிமுறைகளையும் அதிகம் பின்பற்றியது பள்ளிவாயல்கள்தான் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தே கிடையாது என அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். 

அக்கரைப்பற்று பிரதேச பள்ளிவாசல்களை மீள திறப்பது தொடர்பிலான கூட்டத்தின் பின்னர் அவர் இவ்வாறான கருத்தை தெரிவித்தார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர், பள்ளிவாசலுக்கு வருகின்றவர்களால் இத்தொற்று பரவி விட்டால் நிலை எவ்வாறு இருக்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அச்சம் கொண்டாலும் சந்தை, அரச நிறுவனங்கள், வங்கிகள் என எல்லா அமைப்புகளும் இயங்குகின்றபோது இறைவன் அருள் சொரியும் பள்ளிவாயல்களை மாத்திரம் மூடி வைத்திருப்பது உங்களிடம் இறைவன் கேள்வி கேட்கமாட்டானா? என மக்கள் கேள்வி கேட்கின்றனர்.

ஆகவே கொரோணா கட்டுப்பாட்டு சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிபந்தனைகளுடன், சுகாதார வழிமுறைகளை பேணி பள்ளி வாயல்களை மீள திறப்பதற்கு அனுமதி வழங்குங்கள் என அனைத்து பள்ளிவாசல்களின் தலைவர்களும் கேட்டுக்கொண்டதற்கினங்க பள்ளிவாசல்களை மீள திறப்பதற்கு விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்வதாக பள்ளிவாசல்களின் நிர்வாகங்களுக்கு உறுதிமொழிகள் வழங்கப்பட்டது என்றார்.

No comments:

Post a Comment