(எம்.மனோசித்ரா)
இன்று செவ்வாய்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் சிறைச்சாலைகளில் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 19 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்று மாலை வரை 4122 கொவிட் தொற்றாளர்கள் சிறைச்சாலைகளில் இனங்காணப்பட்டுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் 867 தொற்றாளர்களும், மெகசின் சிறைச்சாலையில் 839 தொற்றாளர்களும், மஹர சிறைச்சாலையில் 798 தொற்றாளர்களும், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 417 தொற்றாளர்களும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் 334 தொற்றாளர்களும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment