நாட்டில் இன்றும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி இன்றையதினம் காலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தின் பூஜாபிட்டிய பகுதியிலுள்ள பமுனுகம மற்றும் திவனாவத்த ஆகிய பகுதிகள் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பொலிஸ் பிரிவின் மொரகல்ல பகுதி உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளின் தனிமைப்படுத்தலில் இருந்து இன்று (06) அதிகாலை 5 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி அக்கரைபற்று பொலிஸ் பிரிவிலுள்ள சில பகுதிகளின் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
அக்கரைபற்று 05 கிராம உத்தியோகத்தர் பிரிவு, அக்கரைபற்று 14 கிராம உத்தியோகத்தர் பிரிவு, அக்கரைபற்று நகர எல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு, பாலமுனை 01 கிராம உத்தியோகத்தர் பிரிவு, ஒலுவில் 02 கிராம உத்தியோகத்தர் பிரிவு, அட்டாளச்சேனை 08 கிராம உத்தியோகத்தர் பிரிவு, அக்கரைபற்று 8/1 கிராம உத்தியோகத்தர் பிரிவு, அக்கரைபற்று 8/3 கிராம உத்தியோகத்தர் பிரிவு, அக்கரைபற்று 09 கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பகுதிகள் இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment